சென்னையில் உடல்நலக் குறைவால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரகாஷ் (46) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் மீன்பிடித்து கரைக்கு திரும்பிய அவரது நெருங்கிய நண்பர் ஏகாம்பரம் (47), பிரகாஷின் மறைவு செய்தியை கேட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்தார். நண்பனை பிரிந்த துயரம் தாங்காமல் ஏகாம்பரத்தின் உயிரும் சம்பவ இடத்திலேயே பிரிந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
