Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

நீட் தேர்வை ரத்து செய்வதே-ஒரே தீர்வு-ஸ்டாலின் காட்டமான பதிவு

தேசியத் தலைநகர் டில்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ள திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக அமையும் எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வில் மறைந்துள்ள ஆபத்துகளையும், வணிகமயமாக்கலையும் ஆரம்பத்திலிருந்தே திமுக எதிர்த்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், நீட் தேர்வை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!