அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு
அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்.
அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது; சமூகத்திற்கு இடையே பகை, வெறுப்பை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது.
ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளின் குரல் மதிக்கப்பட வேண்டும்; மதம், இனம், மொழி, சமூகம் அல்லது சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பை உருவாக்க வாய்ப்புள்ளதாகவோ, ஊக்குவிப்பதாகவோ கூற முடியாது.
பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வினோத் சூர்யா என்பவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
