Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தின் போது வெளியான புகையால், மரத்திலிருந்த கதண்டு வகை வண்டுகள் கலைந்து பக்தர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வண்டுகள் கொட்டியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பக்தர்கள் கடும் வலி மற்றும் அலர்ஜி காரணமாகச் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் திடீர் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

error: Content is protected !!