Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் ஆபீஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் இவரது மனைவி கனகவல்லி (68) . இவர் லாசன் ரோடு அய்யப்பன் கோவில் அருகே காலை 6 மணி அளவில் நடந்து சென்றார் அப்போது இரண்டு மர்ம நபர்கள் டூவீலரில் அவரது அருகாமையில் வந்து கனகவல்லி அணிந்திருந்த 2 பவுன் செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர் கனகவல்லி கூச்சலிட்டார் ஆனால் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாததால் கொள்ளையர்கள் எளிதாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து இருந்துள்ளனர் இது பற்றி கனகவல்லி கொடுத்த புகாரி அடிப்படையில் செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சியில் பட்டதாரி வாலிபர் திடீர் மாயம்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண் புலவன் (56) இவரது மகன் புருஷோத்தமன் ( 22) பி.டெக் முடித்துள்ளார் ஆனால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார் இதனால் அவரது பெற்றோர்கள் மகனின் எதிர்காலத்தை எண்ணி வருந்தினர் மேலும் வேலையில்லாமல் இப்படி வீட்டில் இருக்கிறாயே என கேட்டு ஏதாவது கிடைக்கும் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர் இதனால் விரக்தி அடைந்த புருஷோத்தமன் வீட்டிலிருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தோம் எந்த தகவலும் கிடைக்கவில்லை அதைத் தொடர்ந்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் புருஷோத்தமனை எடமலைப்பட்டி புதூர் போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!