Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை …. அய்யாக்கண்ணு

5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை .... அய்யாக்கண்ணு

தமிழக விவசாயிகள்
கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுவதுமாக தவெக அரசு தள்ளுபடி செய்யவில்லை என்றால் வரும் 5ஆம் தேதி முதல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கரூரில் பேட்டி.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக முதல்வர் ஜோஷப் விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுத்தது போல் தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் முழுவதும் தள்ளுபடி செய்ய கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் முழுவதும் தவெக அரசு தள்ளுபடி செய்ய கோரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் :-

தேர்தல் வந்தால் மட்டும் விவசாயிகள் முதுகெலும்பு என்று கூறுகிறார்கள். தேர்தல் முடிந்தால் எங்களை அடிமை மாதிரி பார்க்கிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளின் 24 லட்ச கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. மோடி ஐயா ஏன் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு முதல்வர் தேர்தல் வாக்குறுதி படி விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

காவிரி குண்டாறு காவேரி அய்யாறு காவிரி வைகை நதிகள் இணைப்பிற்கு விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லை – கரூர் திருச்சி மாவட்டங்களில் மணல் குவாரிகள் திறக்க விடமாட்டோம் முசிறி முதல் – வாத்தலை வரை 50,000 தென்னை மரங்களும் 10,000 பனை மரங்களும் காய்ந்து விட்டது.

தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையென்றால் வருகிற 5-ம் தேதி முதல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!