Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்- மகேஸிடம் இளம்பெண் ஆதங்கம்

திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலைப் பகுதியில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பங்கேற்ற இளம் பெண் ஒருவர் இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூக நிலைமை குறித்துத் தனக்கிருந்த ஆதங்கத்தை அன்பில் மகேஷ் முன்னிலையில் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

திமுக சார்பில் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மக்கள் பணிகளைத் தீவிரப்படுத்தவும் மாவட்டத் தோறும் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொன்மலைப் பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பகுதி மற்றும் வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கட்சிப் பணிகளில் இளைஞர்களைப் பெருமளவில் ஈடுபடுத்துவது குறித்த விவாதங்கள் நடைபெற்ற போது இச்சம்பவம் நிகழ்ந்தது.

பொன்மலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் தங்களது கருத்துகளையும் கள நிலவரங்களையும் அன்பில் மகேஷிடம் எடுத்துரைத்தனர். அப்போது கூட்டத்தில் பேசிய இளம் பெண் ஒருவர், இன்றைய சூழலில் இளைஞர்கள் கட்சிப் பணிகள் மற்றும் சமூகக் கருத்துகளில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், சமூக வலைதளங்களில் “ரீல்ஸ்” (Reels) செய்வதிலேயே அதிகக் கவனம் செலுத்தித் திசைமாறிப் போவதாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இளம் பெண்ணின் இந்த உருக்கமான பேச்சைக் கேட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் அதனைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டனர்.

error: Content is protected !!