Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பருவ கால கொள்முதல் பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் பிரவீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டலத்தில் 2014 முதல் 2023 வரை பணி நியமனம் பெற்றுள்ள அனைத்து நிலை பருவ கால கொள்முதல் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தை போலவே பருவ கால பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட வழிவகை செய்திட வேண்டும், அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் அவுட் சோர்சிங் மூலமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியமர்த்தம் செய்ய வேண்டும், உள்ளூர் அரசியல் மற்றும் விவசாய சங்கங்களின் தலையீடு இல்லாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும், பணியாளர்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மோசங்களை எழுப்பினர்.

error: Content is protected !!