கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து, ஆற்றூரைச் சேர்ந்த ஆஷிகா (22) என்ற செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜஸ்டின் ராஜ் என்பவரின் மகளான ஆஷிகாவிற்கு அண்மையில் நிச்சயதார்த்தம் முடிந்து, வரும் ஜனவரி 4ம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி
