குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/4 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்
கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே இராஜேந்திரம் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவலர் சுந்தர் மகன் சுரேஷ் இவர் வீடியோ கிராபராக வேலை செய்து வருகிறார் இவரது மனைவி ரூபினி மேக்கப் ஆர்டிஸ்ட் ஆகவும் உள்ளார் இவர்கள் இருவரும் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் நல்லகாரிய விசேஷங்களுக்கு ஆர்டர் வாங்கி வேலை செய்து வருவது வழக்கம்
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த வேலையாக இருவரும் கேரளா சென்றிருந்தனர் இன்று காலை வீட்டிற்கு வந்து அவர்கள் தங்கியிருக்கும் மேல்மாடி அறையில் பார்த்தபோது கழிவறை பின்புறம் உள்ள ஜன்னல் உடைப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூபாய் 1 1/4 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 8 பவுன் தங்க நகைகள் திருடுப் போனது தெரியவந்தது
இது குறித்து குளித்தலை இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர் தொடர்ந்து கரூர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவுகள் செய்தனர்
இதனால் இராஜேந்திரம் கிராமத்தில் மர்ம நபர் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
