Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உணவில் விழுந்த பல்லி– 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

உணவில் விழுந்த பல்லி– 100 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழக்கம் போல் மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது. பணியாளர்கள் உணவை உட்கொண்டிருந்த போது, சமைக்கப்பட்ட உணவில் செத்த பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் உணவைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. நிலமையின் தீவிரத்தை உணர்ந்த சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பணியாளர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

error: Content is protected !!