திருச்சி, தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(49). இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே நடந்து சென்ற போது தென்னூர் அன்னை சத்யா நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி குருமூர்த்தி என்கிற காட்டு ராஜா பைபிள் 25 என்பவர் மது பிடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். உடனே குருமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.500 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி குருமூர்த்தியை கைது செய்தனர்.
