திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு மாதமும் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 5 கடைஉரிமையாளர்கள் கடந்த சில மாத காலமாக தொடர்ந்து வாடகைக்கு கட்டாமல் இழுத்து அடித்து வந்தனர் தொடர்பாக மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஆனால் நோட்டீஸ் அனுப்பப்பட்டும்கடை உரிமையாளர்கள் வாடகை பணத்தை கட்டாத காரணத்தால் இன்று மாநகராட்சி கமிஷனர் உத்தரவு பேரில் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சீனிவாசன் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வாடையை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைத்து பூட்டினர்.
