அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு பிறகு தற்காலிக அமைதி நிலவி வந்த சூழலில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. எனினும், ஈரான் ஏவிய ஏவுகணைகளை ஜோர்டானின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி முறியடித்துள்ளது. இந்த எதிர்பாராத ஏவுகணை தாக்குதலால் அமைதியை நோக்கி சென்று கொண்டிருந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் கடும் பதற்றமும் போர்ப் பீதியும் உருவாகியுள்ளது.
