Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

கோலிவுட்டில் 80களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.  சுமார் 20 வருடங்களாக தமிழ் சீரியல்களில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வருகிறார். தேவையானி நடிப்பில் 2004ஆம் ஆண்டு ஒளிபரப்பான கோலங்கள் தொடரின் முக்கிய கேரக்டர்களுள் இவரும் ஒருவர். சன் டிவி தொடர்களில் தொடர்ந்து முகம் காண்பித்து வரும் இவர், கடைசியாக தாலாட்டு தொடரில் நடித்து இருந்தார். பிரபல நடிகை லக்ஷமியின் முன்னாள் கணவர் இவர். பார்த்திபன் கனவு, அப்பு, சச்சின், சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

நடிகர் மோகன் ஷர்மா, தற்போது தன்னுடைய 80-வது வயதில் சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி உள்ளதாக தகவல் வெளியாகியது.


ஒரு பிரபல சேனலுக்கு மோகன் ஷர்மா தந்துள்ள பேட்டியில், “நான் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு யார் மீதும் எந்தக் குறையும் இல்லை.. வயது மூப்பு, தளர்ச்சி காரணமாகவே மன அமைதிக்காக தானாக முன்வந்து கும்மிடிப்பூண்டியில் உள்ள இந்த ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன். என் தனிப்பட்ட தேவைகளையும் மருத்துவ உதவிகளையும் தன்னுடைய நண்பர்கள் மற்றும் நல விரும்பிகளே கவனித்து கொள்கிறார்கள்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

 என்னுடைய ‘நம்ம கிராமம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினா எனக்கு மருந்து மாத்திரை வாங்க அது உதவும். சினிமா உலகத்துல யாராவது இந்த விஷயத்துல எனக்கு உதவினா அவங்களை மறக்கவே மாட்டேன் என்று கண்கலங்கி பேசியுள்ளார் 

error: Content is protected !!