மதுரை, மேலூர் பகுதியில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு தடை கோரி காவிரி நீர்வள பாதுகாப்பு சங்க செயலாளர் மோகனசுந்தரம் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற தடை உத்தரவை மீறி தொடர்ந்து மணல் குவாரிகள் செயல்படுவதாக வீடியோ ஆதாரத்துடன் மனுதாரர் குற்றம்சாட்டிருந்தார். கனிமவளத்துறை உதவி இயக்குநர் சம்பந்தப்பட்ட குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
