Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய … பாடகி ஜமுனா ராணி காலமானார்

நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய-பாடகி ஜமுனா ராணி காலமானார்

யாரடி நீ மோகினி, அத்திக்காய் காய், நான் சிரித்தால் தீபாவளி உள்ளிட்ட தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி.கடைசியாக இவர் 1992-ல் தமிழில் வெளியான ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். கலைமாமணி, அறிஞர் அண்ணாதுரை விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி அவரது 7வது வயதில் “தியாகய்யா” என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார்.மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் “நாயகன்” படத்தில் இடம் பெற்ற “நான் சிரித்தால் தீபாவளி” பாடலைப் பாடியவர். இன்றைய தலைமுறைக்கு இந்தப் பாடலைப் பற்றிச் சொன்னால்தான் தெரியும். குழந்தைத் தனமான குரலுக்கு சொந்தக்காரர் ஜமுனா. தமிழில் 1952ல் வெளிவந்த “கல்யாணி” என்ற படத்தின் மூலம் முதன் முதலில் பாடினார். “காளை வயசு கட்டான சைசு…, செந்தமிழ் தேன் மொழியாள்…, பாட்டொன்று கேட்டேன்…, காட்டில் மரம்…, சின்னச் சின்ன சிட்டு…, காவேரி தாயே…, உங்க மனசு ஒரு தினுசு…, தாரா தாரா வந்தாரா…, எந்த நாளும் சந்தோஷமே…, யாரடி நீ மோகினி…, குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே…, மாமா மாமா…, ஆசையும் என் நேசமும்…,” என அந்தக் காலத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர். ‘காளை வயசு கட்டான சைசு’, ‘பாட்டொன்று கேட்டேன்’, ‘சின்னச் சின்ன சிட்டு’, ‘காவேரி தாயே’, ‘யாரடி நீ மோகினி’, ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’, ‘மாமா மாமா’ உள்ளிட்ட பல வெற்றிப் பாடல்களைப் பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!