Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர்- கருப்பசாமிக்கு 700 கிலோ எடையில் அரிவாள்- கும்பாபிஷேகம்

அரியலூர்-கருப்பசாமிக்கு 700 கிலோ எடையில் அரிவாள்-கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள காவனூர் கிராமத்தில் கருப்பு சாமி கோவில் அமைந்துள்ளது. கிராமத்து மக்களுக்கும், பலருக்கும் இந்த கருப்புசாமி கோவில் குலதெய்வமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தங்களது கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாக மாற்ற வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து

கருப்பு சாமியின் அடையாளமாக விளங்கும் அறிவாளை, 700 கிலோ இரும்பினால் 25 அடி உயரம் இரண்டடி அகலத்தில் தயார் செய்தனர். பின்னர் கருப்பசாமி கோவில் வளாகத்தில் 25 அடி உயர அறிவாலளை நிலைநிறுத்தினர். பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக நிர்ணயிக்கப்பட்ட 25 அடி உயர அறிவாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில்

பூஜிக்கப்பட்ட புனித நீரை கொண்டு வந்து அறிவாளி போற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் காவனூர் கிராமத்தில் கருப்பசாமி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 25அடி உயரமுள்ள அரிவாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில் இவ்வளவு உயரம் கொண்ட அரிவாள் கிடையாது, எங்கள் கருப்பு கோவிலின் அடையாளம் தெரியவேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் இவ்வளவு பெரிய

அரிவாள் தயார் கருப்புசாமிக்கு அமைத்துள்ளோம் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மிகப்பெரிய அரிவாள் அமைத்துள்ளதை அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.

error: Content is protected !!