பட்டுப் புடவைகளால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்: ஆடி வெள்ளியில் பக்தி பெருக்குடன் வணங்கி, ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் சென்ற பெண் பக்தர்கள்.
ஆடி மாதம் பிறந்தாலே, அம்மன் கோவில்களில் விசேஷ வழிபாடுகள் சிறப்பு பூஜைகள்

நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் முடித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
அரியலூர் நகரில் மேலத்தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பட்டுப்புடவைகளைக் கொண்டு செய்யப்பட்ட அலங்காரம் காண்பவர்களை கவர்ந்து இழுத்தது.
அம்மனுக்கும், அம்மன் வீற்றிருக்கும் பீடம் மற்றும் சுவர் முழுவதும் பட்டுப்புடவைகளால்

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் நாணயங்கள் கொண்டு செய்யப்பட்ட மாலையை

பெரியநாயகி அம்மனுக்கு அணிவித்திருந்தனர்.
இது காண்போரை மிகவும் கவர்ந்தது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆடி வெள்ளியில் பெரியநாயகி அம்மனை தரிசித்து, கலந்து கொண்டு பெரியநாயகி அம்மனை தரிசித்து ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
