Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வியாபாரி வீட்டில் வைர நகைகள் கொள்ளை… சிறுவன் கைது

திருச்சியில் வியாபாரி வீட்டில் வைரநகைகள் கொள்ளை-சிறுவன் கைது

திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் வள்ளியப்பன், ஆட்டு தோல் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (74).
கடந்த 23 ந் தேதி மல்லிகா, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் திருமயத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 31 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 வைரக் கற்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கைரேகைகள் மற்றும் பிற தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் ஒரு சிறுவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைரேகை மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் உதவியுடன் குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடித்த போலீசாரின் நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!