Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12 லட்சம் ஜிஎஸ்டி.. நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு

கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12லட்சம்-GST நோட்டீசால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ராஜா(57) என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ராஜா திருப்பத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க்கிற்கு பணத்தை எடுக்க சென்றுள்ளார்.

அப்போது வங்கியின் பணியாளர்கள் உங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள வணிகவரித்துறை உதவி ஆணையர் மூலமாக வரியைப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில் வுட் லேண்ட் எண்டர்பிரைஸ் என்கிற நிறுவனம் வைத்துக்கொண்டு அதன் மூலம்
13 லட்சத்து 12 ஆயிரத்து 192
ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று தனது வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அதன் காரணமாக உங்க வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ந்து போன ராஜா செய்வதறியாமல் திகைத்து வருகிறார். கட்டிட வேலை செய்யும் நபருக்கு 13 லட்சத்து 12 ஆயிரத்து 192 ரூபாய் ஜிஎஸ்டி வரியைப்பு செய்ததாக நோட்டீஸ் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

error: Content is protected !!