Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆடி 18… திருச்சியில் பூ, பழங்களின் விலை உயர்வு


ஆடி 18 விழாவை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது மல்லிகைப்பூ ரூ500 லிருந்து ரூ600,முல்லைபூ ரூ 400 லிருந்து ரூ 500, ரோஜா பூ ரூ200 லிருந்து ரூ250, விச்சு பூ ரூ120 லிருந்து ரூ160, சம்மங்கி ரூ200 லிருந்து 300, ஜாதிப்பூ ரூ 400 லிருந்து ரூ 600 , செவ்வந்தி 200 லிருந்து 250க்கு விற்கப்படுகிறது.இதேபோன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைப்பழம் கொய்யாப்பழம் ,திராட்சை,ஆரஞ்சு, மாதுளம்,சாத்துக்குடி உள்ளிட்ட பல பழங்களின் விலை இரு மடங்காக உயர்ந்தது.மேலும் ஆடி 18க்கு சாமி கும்பிட படையல் போட பயன்படுத்தும் வாழை அரிசி விலையும் உயர்த்துள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

error: Content is protected !!