பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி வடசேரி ரோடு அய்யா திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடத்தப்பட்டது இந்த விளையாட்டுப் போட்டியினை பட்டுக்கோட்டை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn.PHF.Dr.S. முருகானந்தம் அவர்களும்,Rtn.MPHF.T. முருகன் அவர்களும் துவங்கி வைத்தனர். 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆடவர், பெண்கள் என தனியே 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியினை தஞ்சை மாவட்ட சதுரங்க அமைப்பின் செயலாளர் Rtn.சிலம்பரசன் சிறப்பாக வழி நடத்தினார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்தும் 450 சதுரங்கப் போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற 17 வயதுக்கு கீழ் உள்ள சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு ஆண் ,பெண் இரு பாலருக்கும் சான்றிதழ்களும்

மெடல்களும் கோப்பைகளும் வழங்கி பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.MPHF.Er.D.ஜான் பிரட்ரிக் செயலாளர் Rtn.M.ராமன் பொருளாளர் Rtn.S.ரமேஷ் மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் Rtn.A.முகமது அலி ஜின்னா ,Rtn.Aரமேஷ் Rtn.M.சத்தியமூர்த்தி Rtn.Mபாண்டியன் Rtn.கலைக்குமார்,Rtn. காளிமுத்து, Rtn.S.மதிவாணன்,Rtn. அருண் பிரசாத் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு பரிசளித்து விழாவினை சிறப்பித்தனர். இந்த சதுரங்க விளையாட்டுப் போட்டியின் கமிட்டி சேர்மன் முன்னாள் தலைவர் Rtn.VPP.ஆனந்த் அவர்கள் சிறப்பாக விளையாட்டு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். இந்த விளையாட்டு போட்டிக்கு வருகை புரிந்த குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சுமார் 1200 பேர் அளவில் மதியம் உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முடிவில் நன்றி உரையுடன் இனிதே விழா நிறைவடைந்தது.
