இபிஎஸ் அளித்த பொறுப்புகளை ஏற்க போவதில்லை என நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழன் ஆகியோர் வேலுமணி தலைமையில் கூட்டாக அறிவித்துள்ளன.
பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கிவருகிறார். 200க்கும் மேற்ப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி நீக்கியுள்ளார். தலைமைக்கு எதிராக தக்க காலத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும். ஈ.பி.எஸ் அளித்த பொறுப்புகளை ஏற்கப்போவது இல்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் உள்ளிட்ட புதிய பொறுப்புகளை ஏற்க முடியாது” என்றார்.
