தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான டிப்ளமா நேரடி மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 55 அரசு கல்லூரிகளில் 10,600 இடங்களும், 400-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் 22,000 இடங்களும் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளதால் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சேர்க்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
