திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இன்று இரவு கார் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:தமிழகம்