உதயநிதியின் பேச்சு மிகவும் தரக்குறைவாக, அவமதிப்புக்குரியதாக இருந்தது என குஷ்பு தெரிவித்துள்ளார். தனது X பதிவில், தங்கள் அரசியல் எதிரியின் செயல்பாடு, தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவத்திற்கு ஈடுகொடுக்க முடியாதபோது, தனிப்பட்ட அவதூறுகளை கையில் எடுப்பதே சிலருக்கு மிக எளிதான தப்பிக்கும் வழியாகிவிடுகிறது. த்ரிஷாவை அவமதித்ததற்காக, உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
