சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,988 கனஅடியில் இருந்து 18,905 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 74.55 அடியாகவும் நீர் இருப்பு 36.740 டி.எம்.சி. ஆகவும் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு தொடர்ந்து 1500 கன அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,905 கனஅடியாக உயர்வு
