Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாய்கள் குரைத்தால்-ஆக்ரோஷமடைந்த ஒற்றை யானை-கோவையில் பரபரப்பு

கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை, தெருநாய்கள் குரைத்ததால் ஆக்ரோஷம் அடைந்து தன்னைத் தானே சுற்றி சுற்றித் தேடிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

​கோவை, தடாகம் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் ‘கிரீன் பீல்ட்’ குடியிருப்புப் பகுதிக்கு நேற்று நள்ளிரவில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடிப் புகுந்து உள்ளது. இந்த யானை ஏற்கனவே அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயில் கேட்டை உடைத்துச் சேதப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

​இந்நிலையில், மீண்டும் அதே வீட்டிற்கு உணவு தேடி வந்த அந்த ஒற்றை யானையைக் கண்டு,

அங்கிருந்த தெருநாய்கள் இடைவிடாமல் தொடர்ச்சியாகக் குரைத்துக் கொண்டே இருந்து உள்ளன.

இதனால் கடும் ஆக்ரோஷம் அடைந்த அந்த ஒற்றைக் காட்டு யானை, நாய்களைத் தாாக்குவதற்காகத் தன்னைத் தானே கோபத்துடன் சுழன்று சுழன்று தேடி உள்ளது.

​யானையின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையை அருகில் இருந்த வீட்டில் இருந்து ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார்.

தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ காட்சிகள், அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

​அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

error: Content is protected !!