அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணித்த ‘மெரைன் ஒன்’ ஹெலிகாப்டருக்கு அருகில் ஒரு பயணிகள் விமானம் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேரிலேண்ட்டில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்திற்கு டிரம்ப் சென்று கொண்டிருந்தபோது, வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஹெலிகாப்டருக்கு மிக அருகே வந்தது. இந்த சம்பவத்தால் விமானப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு அறையின் தகவல் பரிமாற்றம் குறித்து பெடரல் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரணையை துவங்கியுள்ளது.
