Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி…

மதுபோதையில் கிணற்றுக்குள் விழுந்து விவசாயி பலி...

திருச்சி ஜம்புநாதபுரம் அருகே உள்ள பொன்னுசங்கம் பட்டி முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (48). விவசாயியான இவர் தோட்டத்தில்
கால்நடைகள் வளர்த்து வந்தார். இரவு நேரங்களில் காவலுக்காக தோட்டத்து குடிசை வீட்டில் இரவு படுத்துக் கொள்வார். வழக்கம்போல் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். மறுநாள் அவர் வீடு திரும்பவில்லை.
பின்னர் தோட்டத்தில் சென்று பார்த்தபோது, விவசாய கிணற்றுக்கு அருகாமையில் அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது அவர் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.
பின்னர் இது பற்றி சுமதி ஜம்புநாதபுரம் போலீசல் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார்
சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மது போதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து விவசாயி தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

திருச்சி, நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (53). இவர் கடந்த ஐந்தாண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.இதற்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கும் மருத்துவம் பார்த்தார் ஆனால் அவரால் பிரச்சனைகளில் இருந்து மீள முடியவில்லை.
இதனால் மனம் உடைந்த வேல்முருகன் யாரும் எதிர்பாராத வகையில் எலி மருந்தை சாப்பிட்டு விட்டார் பின்னர் உயிருக்கு போராடிய அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.

முகத்தில் விஷ ஸ்பிரே அடித்த தொழிலாளி பரிதாப சாவு

திருச்சி சோமரசம்பேட்டை கோசம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பனையாடி (55) தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் மது அருந்தி வந்தார்.
மேலும் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஒன்பதாம் தேதி மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான பனையடி வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி ஸ்ப்ரேயை எடுத்து தனது முகத்தில் அடித்துள்ளார். இதில் அவரது காது மற்றும் மூக்கு வழியாக விஷம் உடலுக்குள் ஊடுருவி விட்டது. பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஒரு மாதம் சிகிச்சையில் இருந்த பனையடி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பானுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சோமரசம் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!