திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காஜா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றபோது, அங்கிருந்த ஏ.சி. கம்ப்ரஸர் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக, விபத்து நேரிட்ட சமயத்தில் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
