குடிநீருக்கும் நிலத்தடி நீருக்கும் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதிருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம், மாவட்டசெயலாளர், அயிலை சிவசூரியன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது…
கடந்த வாரத்தில் வறண்டு கிடந்த காவிரியில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக் கெனதிறக்கப்பட்ட 1500 கன அடி தண்ணீரில் சுமார் 300 கன அடி தண்ணீர் முக்கொம்பு மேலனைக்கு வந்து கல்லணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது இதே தண்ணீர் வந்து கொண்டிருந்தால் கல்லணை சென்றடையுமா என்பது சந்தேகம் அப்படியே சென்றாலும் இத் தண்ணீர் கல்லணை சென்றடைய இனனும் குறைந்தது 10 தினங்களுக்கு மேலாகும்
மேலும் காவிரியை நம்பியுள்ள உய்யக்கொண்டான் கட்டளை கால்வாய் ராம வாத்தலை புதுவாத்தலை உள்ளிட்ட 17 கால்வாய்கள் தண்ணீர்இல்லாமல் வறண்டு கிடக்கிறது இப்பாசன கால்வாய்களில் நிலத்தடி நீரை நம்பி லட்சக்கணக்கான ஏக்கரில் வாழை கரும்பு கோரை வெற்றிலை கொடிக்கால் மலர் செடிகள் உள்ளிட்ட ஆண்டு பயிர்கள்
சாகுபடி செய்யப்பட்டுள்ளதுதற்போது பாசன கால்வாய்களிலும் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும கீழே போய் போதிய தண்ணீர் கிடைக்காமல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகிவிவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்சூழல் ஏற்பட்டுள்ளது அதேபோல் காவிரி கரையோரம் உள்ள பல ஊராட்சிகளுக்கு நிலத்தடி நீர் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது எனவே திறக்கப்பட்ட நீர் கல்லணைக்கு விரைவாக சென்றடையவும், காவிரி மற்றும் அதன் கிளை கால்வாயிலுகளில் குடிநீருக்கும் நிலத்தடி நீருக்கும்தண்ணீர் கிடைக்கும வகையில் மேட்டூரில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
