முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா4ம் தேதி அஸ்வினியுடன் தொடங்கியது ஐந்தாம் நாளான இன்று ஆந்திர

மாநில முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் தமிழ் தெலுங்கு பிரபல திரைப்பட நடிகை ரோஜா முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்து மலைக்கோவிலில் பயபக்தியுடன் சாமி தரிசனம்

செய்தார்
இதனைத் தொடர்ந்து அவர் எடுத்து வந்த காவடியில் இருந்த பூஜை பொருட்களை உற்சவர் சண்முகப் பெருமானுக்கு அர்ச்சனைக்கு வழங்கி சாமி தரிசனம் செய்தார்.

உற்சவர் முருகப்பெருமான் சன்னதியில் மனம் உருகி வழிபாடு செய்தார்
இதனைத் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகத்தினர் நடிகை ரோஜா அவருக்கு திருக்கோயில் பிரசாதம் மலர்மாலை ஆகியவற்றை வழங்கினார்கள்,

ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை நிகழ்ச்சியில் திருத்தணி முருகப் பெருமானை தரிசனம்

செய்வதற்கு காவடி உடன் வந்து தரிசனம் செய்வது முருகப்பெருமான் எனக்கு பிடித்த தெய்வம் என்று தரிசனம் செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தார்…..
