அமெரிக்காவின் யுஜின் நகரில் நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 74.09 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இது நடப்பு தொடரில் இந்தியா வென்ற முதல் பதக்கமாகும். 19 வயதான ஆஷிஷ், உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
