ஜெயங்கொண்டம் – கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய கங்கை நீரை அனுப்பி வைத்த மத்திய நிதி அமைச்சர்
வேத மந்திரங்கள் முழங்க கங்கை நீரால் பிரகதீஸ்வரருக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக உருவாக்கிய மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை இன்று அரசு விழாவாக கங்கைகொண்ட

சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாட ப்படுகிறது. இதனால் கங்கைகொண்ட சோழபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யும் வகையில் மத்திய நிதி

அமைச்சர் நிர்மலா சீதாராமன் கங்கை நீரை அரசு தபால் சேவை மூலம் அனுப்பி வைத்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி கங்கை நீர் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தபால் துறையினர் மத்திய நிதி அமைச்சர் அனுப்பிய

கங்கை நீரை கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் கோமகனிடம் வழங்கினர். பின்னர் மேளதாளங்கள் முழங்க கங்கை நீருடன் கோவிலை வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க ஓதுவார்கள் சிவபுராணம் பாட பிரகதீஸ்வரருக்கு கங்கை நீரால்

அபிஷேகம் செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கடந்த வருடம் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கங்கை நீரை எடுத்து வந்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
