Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 அம்ச கோரிக்கை- மத்திய தொழிற்சங்கம் திருச்சியில் மறியல்

10 அம்ச கோரிக்கை- மத்திய தொழிற்சங்கம் திருச்சியில் மறியல்

​​தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும்; மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தம் 2025 மற்றும் சாந்தி சட்டம் உள்ளிட்டவற்றைத் திரும்பப் பெற வேண்டும்; விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களைப் பாதிக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடனான தாராள வர்த்தக ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; நீட் மற்றும் சி.பி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெறும் முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; கல்வியைத் தனியார்மயமாக்குவதைக் கைவிட்டு, கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சுதந்திரப் போராட்டத்தின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை நினைவுகூரும் வகையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயச் சங்கங்கள் சார்பில் இன்றுமறியல் போராட்டம் நடைபெற்றது.
​திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு வந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர், மெயின்காட் கேட் பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
​இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள்
தொ.மு.ச.
ஜோசப் நெல்சன்,
சி.ஐ.டி.யு.
ரெங்கராஜன்,
ஏ.ஐ.டி.யு.சி.
ராமராஜ்,
எச்.எம்.எஸ்.
ஞானதுரை,
ஏ.ஐ.சி.சி.டி.யு.
ஞானதேசிகன்,
எல்.எல்.எஃப்.
தெய்வீகன்,
யு.டி.யு.சி.
சிவச்செல்வம்
எஸ்.கே.எம்.
அயிலை சிவசூரியன் உள்பட200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

error: Content is protected !!