Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேகதாதுவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துமா தவெக?…. முத்தரசன் பேட்டி

மேகதாதுவுக்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்துமா தவெக?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தமிழ்நாடு ஒன்றிணைந்து நின்றது போல, காவிரி விவகாரத்திலும் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி என பேதம் பாராமல் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை இல்லை எனும் அமைச்சரின் கருத்து ஏற்புடைய கருத்து அல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் பேட்டி…

அரியலூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக அரசுக்கு எதிரான மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பின்னர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசி அவர், ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறோம்.

12 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி என்பது தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, மாணவர், இளைஞர் நலனுக்கு, பெண்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், நீட் நுழைவு தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த இயக்கம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசை பொருத்த அளவு நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில் நல்ல விஷயங்கள் பல உள்ளன அதனை வரவேற்கிறோம்.

மேலும் மக்கள், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதிர்பார்த்து உள்ளனர். அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மானிய கோரிக்கைகளின்போது அரசு எடுக்க வேண்டும்.

நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெற வேண்டும் என முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை, அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதற்கான முயற்சியை அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அரசு ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகளுக்கு நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை அளித்துள்ளதை வரவேற்கின்றோம். அதே சமயம் விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். தற்போது அறிவித்துள்ள கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பெரும் அளவில் பயன்படாது.

மகாத்மா காந்தி வேலை உறுதி அளித்து சட்டத்தை ஒன்றிய மோடி அரசு சீர்படுத்துவிட்டது. காந்தியின் பெயரையே இருக்கக் கூடாது என முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டாதது கொடுத்த செய்தியாளர்களின் கேள்விக்கு…

*தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் தமிழ்நாடு எப்படி ஒன்றுபட்டு இருந்ததோ, அதேபோன்று தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்சினையான காவிரி பிரச்சினையிலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

தமிழ்நாடு அமைச்சர் ஒருவர் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட அவசியமில்லை என சொல்லி இருக்கிறார். அவரது கருத்து ஏற்புடைய கருத்தல்ல.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறு வரையறை மசோதா என்பது பாஜக அரசாங்கம் பின்னிக்கின்ற சதி வலை. தொகுதி மறு வரையறை எனும் சிறந்து வலையில் எவரும் சிக்கிவிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!