விண்வெளியில் நிகழும் அபூர்வ மற்றும் அழகான நிகழ்வுகளில் ஒன்றான ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை இன்று இரவு வானில் நிகழவுள்ளது. 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த அரிய வானியல் நிகழ்வின் போது, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50 முதல் 100 விண்கற்கள் பூமியை நோக்கி பொழியும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால் விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
விண்வெளியில் மிதக்கும் தூசிகள் மற்றும் விண்கற்களின் துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது காற்றுடன் உராய்வு அடைகின்றன. இத்தகையக் கடுமையான உராய்வினால் ஏற்படும் வெப்பம் காரணமாக அவை சூடாகி, நெருப்புப் பிழம்பு போல வானில் ஒளிர்ந்து எரிகின்றன. இந்த எழில்மிகு காட்சியையே அறிவியல் ரீதியாக ‘விண்கல் மழை’ (Meteor Shower) என்று அழைக்கிறோம்.
இன்று நிகழவுள்ள இந்த விண்கல் மழையின் போது, ‘பெர்சீட்’ விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தை நோக்கி அதிவேகமாகப் பாய்ந்து வரும். வளிமண்டலக் காற்றுடன் உரசி ஒளிரும் இந்த விண்கற்கள், ஒரு மணி நேரத்திற்குப் சராசரியாக 50 முதல் 100 என்ற எண்ணிக்கையில் பூமியை நோக்கிப் பொழியும். மேகமூட்டமற்றத் தெளிவான இரவு வானத்தில் இந்த அரியக் காட்சியைக் வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்க முடியும் என்பதால், விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் இக்காட்சியைக் காணத் தயாராகி வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் மூன்று வானியல் காட்சிக் விருந்துகள்.
1), விடியற்காலை வானத்தில் கிரகங்களின் அணிவகுப்பு
சூரிய உதயத்திற்கு முன் ஆறு கிரகங்கள் ஒரே அழகிய வரிசையில் காட்சி தந்தது.
2), பிற்பகல் முழு சூரிய கிரகணம்: சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும் இந்த பிரமிக்கத்தக்க முழு கிரகணத்தை அனுபவிக்கவும்.
முழு கிரகணத்தின் உச்சக்கட்டம்: 1:45 PM ET (பிற்பகல்)
3), இரவு வானம் பெர்சீட் விண்கல் மழை.
இரவு முழுவதும் வானத்தில் மின்னும், வேகமான விண்கற்களை கண்டு மகிழுங்கள்.
நள்ளிரவுக்குப் பிறகு விடியற்காலை வரை பார்க்க சிறந்த நேரம் என கூறப்படுகிறது.
