Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு

தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ ரெய்டு

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 9 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. அந்தமானில் 2024ல் விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் 5,500 கிலோ எடையுள்ள, ‘மெத் ஆம் பெட்டமைன்’ என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், படகில் இருந்த மியான்மரைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பயங்கரவாதத் தொடர்பு அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!