திருச்சியில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மல்லர் கம்பம் போட்டி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் நடுவர்களாக சென்னையைச் சேர்ந்த 3 பேர் விழுப்புரம் மாவட்டத்தை 2 பேர் என 5 பேர் அமர்ந்திருந்தனர். நேற்று முன்தி னம்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மல்லர் கம்ப போட்டியும், நேற்று பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான போட்டியும் நடைபெற்றது. இதில் நடுவர்களாக அமர்ந்திருந்த ஐந்து பேரில் இருவரும் கணவன் மனைவி ஆவார் இந்த 5 பேரும் தனியாக மல்லர் கம்பம் அகாடமி நடத்தி வருகின்றனர் . இதில் கணவன் மனைவி இருவரும் நடுவர்களாக கலந்து கொள்ளும் போட்டிகளில் அவர்களது அகடமியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் போது ஒரு தலைபட்சமாக செயல்பட்டு அவர்களுக்கு ஆதரவாக அதிக மதிப்பெண்களை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான போட்டியிலும் அவர்கள் அகாடமியை சேர்ந்த ஒரு பள்ளி மாணவிக்கு அதிக மதிப்பெண் அளித்தும், அவரை விட திறமையாக செயல்பட்ட முத்தரசி என்ற மாணவிக்கு குறைந்த மதிப்பெண் அளித்ததாக கூறி முத்தரசியின் பயிற்சியாளர் , மற்ற மாணவிகள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் போட்டியை முடிவு தெரியும் வரை நடத்தக்கூடாது எனக் கூறி போட்டியை நிறுத்தி வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதை எடுத்து மல்லர் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பிறகு 3 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகுமுத்தரசி என்ற மாணவிவெற்றி பெற்றதாக அறிவித்ததை தொடர்ந்து சக போட்டி வீராங்கனைகள்நிம்மதி பெருமூச்சு விட்டனர் இதை எடுத்து போட்டி மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்றது.
திருச்சியில் முதல்வர் கோப்பை போட்டியில் முறைகேடு புகார்
