டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அல்-கொய்தாவின் துணை அமைப்பான ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ இயக்கத்திற்கு தொடர்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. என்.ஐ.ஏ. விசாரித்து வரும் இவ்வழக்கில் 3 மருத்துவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அல்-கொய்தா சிறிய குழுக்கள் வாயிலாக தாக்குதல்களை நடத்தி வருவதாக ஐ.நா. அறிக்கை குறிப்பிடுகிறது. உறுப்பு நாடுகள் அளித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையை ஐ.நா. தயாரித்துள்ளது.
