சென்னை அம்பத்தூர் அருகே கொரட்டூரில் நேற்று மாலை ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி.பிரபாகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 300க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், சமூகநலப் பணிகளில் தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்பு முக்கியமானது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். நாடு முழுவதும் பாராட்டுமளவுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறார். நான் சபாநாயகர் என்பதால், தவெக ஆட்சியை உற்றுப்பார்த்து வருகிறேன். பல்வேறு பத்திரிகைகள் லஞ்சம் இல்லாமலும், மக்களை தொந்தரவு செய்யாத தவெக ஆட்சி என எழுதி வருகின்றன என்றார்.
