காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் தொழிற்சாலை பேருந்து, முன்னால் சென்ற கனரக லாரி மீது பயங்கரமாக மோதியது. நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
