ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாக டிரைலர், சமூக வலைதளங்களில் 100 கோடி பார்வைகளைக் கடந்து இந்திய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. சுமார் ரூ.2,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை சர்வதேச அளவில் வெற்றி பெறச் செய்ய, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
