ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலாபூர் காவல்துறையினருக்கு இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், ஒரு சாக்குப்பையில் சடலம் இருப்பதாக ‘டயல் 100’ எண்ணிற்கு அழைப்பு வந்தது. உடனே காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் பீகாரைச் சேர்ந்த 21 வயது ரெஹானா என்பது தெரியவந்தது.
விசாரணையில் ரெஹானா என்பதும், இவர் 21 வயதுடைய அகமது சலாம் என்ற இளைஞரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ரெஹானா தன்னை உடனே திருமணம் செய்துகொள்ளுமாறு அகமதுவை வற்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பான வாக்குவாதத்தின்போது, ஆத்திரமடைந்த அகமது, ரெஹானாவை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, அவரது உடலை ஒரு சாக்குப்பையில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. அகமதுவை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரெஹானாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
