பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பொறுப்பிற்கு சந்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக வானதி சீனிவாசன் தேசிய மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்த நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். தேசிய அளவில் பாஜக பல்வேறு மாற்றங்களை செய்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
