Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூரில் பாரதி மஸ்தூர் சங்கத்தினர் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதி மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 8 மாநிலங்களில் 23 இடங்களில் செயல்பட்டு வரும் நலிவடைந்த நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும், ராஞ்சியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் தொழிலாளர்களுக்கும் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!