கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய அவர், கர்நாடக அரசு வழங்குவதாக அறிவித்த ரூ.5 லட்சம் இழப்பீடு நிதி போதாது. கூடுதல் தொகையை வழங்க வேண்டும். இனியும் இதுபோன்று நடக்காத வகையில் தமிழக அரசு, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
