Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபரை துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டிகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமணி (வயது 68). இவர் இன்று கோவிலுக்கு செல்வதற்காக ஆண்டிகவுண்டம்பட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் செல்லமணி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பறந்து சென்றுள்ளார். அப்போது செல்லமணி கூச்சலிடவே அருகில் இருந்த சிவா, விக்னேஷ் ஆகிய இருவரும் மூதாட்டி கூறிய அடையாளத்தை வைத்து மஞ்சள் பனியன் அணிந்த நபரை இருசக்கர வாகனத்தில் சுமார் 3 கி.மீ., தூரம் துரத்திச் சென்று மர்ம நபரை பிடித்து மணப்பாறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த இன்னாசி சேவியர் சுரேஷ் (37) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து ஒன்றறை சவரன் செயின் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!